யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர்களை பொலன்நறுவைக்கு அனுப்ப நடவடிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 20 தாதியர்கள் பொலன்நறுவையில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக கொரோனா சிகிச்சை நிலையங்கள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் சிகிச்சை நிலையங்களில் தாதியர் பற்றாக்குறை நிலவுகின்றன.

அதனால் கூடுதல் தாதியர்களை கடமைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 4 தமிழ் தாதியர்கள் உட்பட 20 தாதியர்கள் பொலன்நறுவை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply