போலந்தின் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

உலகின் பல்வேறு நகரங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி போலந்தில் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போலந்தில் ஏற்கனவே அமுலிலுள்ள, மிகவும் கடுமையான கருக்கலைப்பு சட்டங்களை மேலும் வரையறுத்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு அமுலுக்கு வந்ததன் பின்னர், கருவில் அசாதாரண நிலை ஏற்பட்டாலும் கருக்கலைப்பு செய்ய அனுமதியளிக்கப்படாது.

பாலியல் துஷ்பிரயோகத்தால் உருவான கரு மற்றும் தாயின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் கருக்கலைப்பு செய்ய தற்போது சட்டபூர்வமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போலந்தில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த போராட்டங்களுக்கான தமது ஆதரவை வௌிப்படுத்தும் வகையில், Oslo, London, Chicago, Glasgow, Brussels, வேறு சில நகரங்களிலுள்ள போலந்து தூதரகங்களுக்கு முன்பாகவும் பொது இடங்களுக்கு முன்பாகவும் மக்கள் திரண்டனர்.

Be the first to comment

Leave a Reply