கொரோனாவால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள மீன்கள் அனைத்தையும் கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக களஞ்சியப்படுத்தி வைத்துள்ள அனைத்து மீன்களையும் அடுத்த நான்கு நாட்களுக்குள் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியை அடுத்து பேலியகொட மத்திய மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களால் கொரோனா கொத்தணி தோன்றியது.

இதனால் மீன்களை விற்பனை செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டது.

எனவே களஞ்சியப்படுத்தி வைத்துள்ள அனைத்து மீன்களையும் அடுத்த நான்கு நாட்களுக்குள் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு விலை கொடுத்து கொள்வனவு செய்யும் மீன்கள் எதிர்காலத்தில் மீன் ரின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் என்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply