ஆனையிறவு பகுதியில் கோரவிபத்து யாழைச் சேர்ந்த தாயும் மகனும் பரிதாபமாக பலி

ஏ-9 நெடுஞ்சாலையில் ஆனையிறவு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ் அநர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியை சேர்ந்த 58 வயதான ராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய ராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வித்துக்குள்ளான குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகனும் படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அவசசிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தாங்கியை செலுத்திவந்த சாரதி பொலிசாரால் கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply