தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் ரயில் சேவைகளை பயன்படுத்த தடை

பாணந்துறை, மொறட்டுவ மற்றும் ஹோமகமவில் நேற்று தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் உள்ளவர்கள் மறு அறிவித்தல் வரும் வரை களனி மற்றும் கடலோரப் பாதைகளில் செல்லும் ரயில் சேவைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் யூனியன்(எஸ்.எல்.ஆர்.எஸ்.எம்.யூ) தெரிவித்துள்ளது.

பனாகொட, ஹோமகம, ஹோமகம மருத்துவமனை மற்றும் மகும்புரா துணை நிலையங்கள் உள்ளிட்ட களனி ரயில் பாதையில் மீகொடவிலிருந்து கொட்டாவா வரையான உப ரயில் நிலையங்களில் ரயில் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று யூனியன் தெரிவித்துள்ளது.

வட்டுவ தொடக்கம் அங்குலானா ரயில் நிலையங்களுக்கு பின்வத்த,பாணாந்துறை, எகொட உயானா, கொரலவெல, மொறட்டுவ மற்றும் லுனாவா துணை நிலையங்கள் உள்ளிட்ட கடலோர பாதையில் இயங்கும் ரயில்களை மக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது நடைபெறும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பிற உதவி ஊழியர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ரயில் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply