20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கைச்சாத்திட்டுள்ளார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் பிரதி செயலாளர் நாயகம் ஆகியோர் முன்னிலையில் சபாநாயகர் சட்டமூலத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

அதற்கமைய அங்கீகாரமளிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்த சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தின் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் , மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Be the first to comment

Leave a Reply