வவுனியா நகரசபை சொந்தமான மைதானம் தற்காலிகமாக மூடல்..!

நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதன் அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரசபை மைதானம் இன்றில் இருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சம் காராணமாக நகரசபை மைதானம் மற்றும் அப் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் பூப்பந்து மைதானம், வலுவூட்டல் நிலையம் என்பவற்றை பயன்படுத்துவதற்கு மறுஅறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வெளிமாவட்டத்தில் இருந்து வருகை தருபவர்கள் காரணமாகவே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனை வெளிப்படுதி சுவரொட்டி மூலம் நகரசபை வாயில்களில் நகரசபைத் தலைவரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்ய சென்ற பலரும் இன்று ஏமாற்றதுடன் திரும்பிச் சென்றிருந்தனர்.

இதேவேளை, நகரசபையின் பொதுப்பூங்கா தொடர்ந்தும் இயங்கி வருகின்றமையும், அங்கு அதிகளவிலான மக்கள் சென்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply