வவுனியா தபால் நிலையத்தில் தேங்கியுள்ள வடபகுதிக்கான தபால்கள்

இலங்கையில் வடபகுதிக்கான தபால்கள் அனைத்தும் வவுனியாவில் தேங்கிய நிலையில் காணப்படுகிறது என தெரியவருகின்றது

கொவிட்19 பரம்பலைத் தொடர்ந்து தொடரூந்து சேவைகள் நிறுத்தப்பட்டிரும்கின்றது, இதைத் தொடர்ந்து வடபகுதிக்கான தபால்கள் அனைத்தும் வவுனியா தபால் நிலையத்தில் தேக்கி கிடப்பதாக அறிய முடிக்கின்றது.

தென்பகுதிக்கான தபால்கள் அனைத்தும் வ்வுனியாவில் இருந்து அனுப்பப்படுகின்ற போதிலும் வட பகுதிக்கான தபால்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படாமல் காணப்படுகின்றது.

குறிப்பாக வவுனியாவிற்க்கான தபால்கள் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் ஏனைய வடபகுதிற்கான விநியோகங்கள் தடைபட்டிருக்கிறது.

வாகனவசதிகள் இருக்கின்ற பொழுதும் அவை தபால்கள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாகவும் காணப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply