வடமராட்சி மக்களே உசார்!! கொரோனா நோயாளி சென்று வந்த இடங்கள் சற்று முன்னர் அறிவிப்பு!!

பருத்தித்துறை – கீரிமலைக்கான 763ம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டு வரும் அரச பேருந்தில் கொரோனா தொற்றாளர் பயணம் செய்துள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்களுக்கான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புபட்டு வடமராட்சி, பொலிகண்டி பிரதேசத்தில் வசித்து வரும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை நேற்று இரவு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த தொற்றாளரிடம் சுகாதாரப்பிரிவினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் அவரது பயண வழித்தடங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர் பேலியகொடை மீன் சந்தையிலிருந்து வந்த பின்னர்,

21/10/2020 பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஜெயாஸ் தையலகம் (மத்திய சந்தைத்தொகுதி) சேட் தைப்பதற்கு சென்றுள்ளதுடன் பருத்தித்துறை பேருந்து நிலைய பகுதியிலும் நடாடியுள்ளார்.

22/10/2020 மீண்டும் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஜெயாஸ் தையலகத்திற்கும் 23/10/2020 பலாலிவடக்கு அன்ரனிபுரம் பகுதிக்கு ஞானப்பிரகாசம் ஞானமணி என்பவருடைய அந்தியேட்டி நிகழ்வுக்கும் சென்றுள்ளார்.

இதுதவிர குறித்த நோயாளியின் தாய் மற்றும் தந்தை,

22/10/2020 – பருத்தித்துறை – கீரிமலை (763) அரச பேருந்தில் மாலை 3.30 மணிக்கு பொலிகண்டியில் இருந்து பலாலிக்கும், 24/10/2020- கீரிமலை – பருத்தித்துறை (763) அரச பேருந்தில் பலாலியிலிருந்து பி.பகல் 6.30 மணிக்கு பொலிகண்டி பகுதிக்கும் வந்துள்ளனர்.

குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தந்த இடங்களுக்கு சென்றவர்கள் உடனடியாக உங்கள் உங்கள் பகுதி சுகாதார பரிசோதகரிடம் தகவலை தெரியப்படுத்துமாற சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply