கொழும்பில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் 7 பேருக்கு கொரோனா

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.

அதேபோல் கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள மற்றுமொரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மாகாணத்தில் இருந்து வெளியேறவும் உள்ளே வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களை தவிர வேறு நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply