ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மேலும் ஒரு தொகுதி கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு துறைமுகத்தில் உள்ள 20 கொள்கலன் கழிகளை இன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மீள அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், மேலும் 65 கொள்கலன் கழிவுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மீள அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு இந்த மாதத்தின் ஆரம்ப பகுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தறவிட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலே இந்த உத்தறவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த மாதம் கழிவுகள் அடங்கிய 21 கொள்கலங்களை இலங்கை இங்கிலாந்திற்கு மீள அனுப்பியிருந்தது.

2017 ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 263 கொள்கலன்களில் ஒரு தொகுதியே இவ்வாறு மீள அனுப்பிவைக்கப்பட்டமை குறிபிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply