68 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்

நாட்டில் 68 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஹோமாகம, மொறட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை நிலையங்களை இரு தினங்களுக்கு திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படவுள்ளன.

கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் செவ்வாய் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படவுள்ளன.

இதனிடையே, யாழ்ப்பாணத்தில் குருநகர் , பாசையூர் ஆகிய இரண்டு கிராமங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இரண்டு கிராமங்களுக்கும் வௌியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நகரமும் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது.

Be the first to comment

Leave a Reply