ஏன் வந்தார் மைக்பொம்பியோ? வெளிவரும் புதிய தகவல்

அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இலங்கைக்கு ஏன் வருகை தந்துள்ளார் என முன்னாள் இராஜதந்திரி தமரா குணநாயகம் விளக்கியுள்ளார்

சீனாவிற்கு எதிராக இலங்கை அமெரிக்காவுடன் இணைவதற்கான அழுத்தங்களை கொடுப்பதே அவரது விஜயத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்துவது குறித்து மைக்பொம்பியோ முன்னர் அறிவித்துள்ளார் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் புதிய வெளிவிவகாரக்கொள்கையை அறிவித்த பின்னரே அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் தமது சுற்றுப்பயணத்தினை ஆரம்பித்துள்ளனர் என தமரா மேலும் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply