மிருகத்தனமான சர்வாதிகாரம் -சீனாவை சாடுகிறாரா பொம்பியோ?

கடன் பொதிகளை வழங்கிவிட்டு அரசாங்கங்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்க அமெரிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இரண்டுநாள் விஜயமாக வருகை தந்த பொம்பியோ இன்றையதினம் ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில்

அமெரிக்க அரசாங்கம் கடன் ஒன்றை அளித்துவிட்டு அதனூடாக தேவையற்ற தலையீடுகள் மற்றும் அழுத்தங்களைப் பிரயோகிக்காது.

அமெரிக்கா வழங்கும் கடன்கள் மிகுந்த வலு கொண்டவை.

‘நிறுவனங்கள், தனியார் முதலீடு, கூட்டாண்மை மற்றும் நட்பு ரீதியாகவே அமெரிக்கா எப்போதும் செயற்படும்.

‘அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் தொழில்முனைவோர் அல்லது நிறுவனங்களுடன் வருவது எமது நிலைப்பாடு அல்ல. பல்வேறு கடன் பொதிகளுடன் நாம் வருவதில்லை. ஏனென்றால் அவ்வாறான கடன் பொதிகளை மீள செலுத்துவது கடினம்.

அமெரிக்கா ஒரு போதும் அவற்றை கடைப்பிடித்து நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்காது. அவை இரண்டும் வேறான விடயங்கள். அது ஜனநாயகம், சுதந்திரம் முக்கியமாக மிருகத்தனமான சர்வாதிகாரம்’என கூறினார்.

Be the first to comment

Leave a Reply