கோடிக்கணக்கில் குவிந்த வாக்குகள்: கெத்து காட்டும் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ரிபப்ளிகன் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாக்ட்ரடிக் கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

ஏற்கெனவே தபால் முறையில் பல லட்சக்கணக்கானோர் வாக்களித்துவிட்டனர். அதிபர் டொனால்ட் ட்ரம்பும் கடந்த வாரம் வாக்களித்துவிட்டார். இரண்டு வேட்பாளர்களும் பிரச்சாரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஏராளமான மக்கள் வாக்களிக்க வேண்டுமென ட்ரம்பும், பைடனும் பிரச்சாரங்களின்போது வலியுறுத்தி வருகின்றனர்.

ஹாலிவுட் நடிகர்கள், பிரபல விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்களும் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஊக்குவிப்பின் விளைவாக, வாக்களிப்பதில் அமெரிக்கர்கள் சாதனை படைத்துள்ளதாக தெரிகிறது.

ஆரம்பகட்ட வாக்குப்பதிவில் ஏற்கெனவே 7 கோடி பேர் வாக்களித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 3 காலக்கெடு நெருங்கி வரும் சூழலில் தினசரி ஏராளமானோர் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மிக உயர்வாக இருக்கிறது.

அமெரிக்காவில் மற்றொரு கருப்பினத்தவர் சுட்டுக்கொலை!

தேர்தலில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதற்கு பல்வேறு காரணங்கள் சுட்டப்படுகிறது. முக்கியமாக, ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் மே மாதம் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதும், அதனால் எழுந்த போராட்டங்களும் மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இதுபோக, கொரோனா பாதிப்பை ட்ரம்ப் அரசு கையாண்ட விதம் குறித்து மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. நவம்பர் 3ஆம் தேதியன்று பிரதான வாக்குப் பதிவு நாளில் கூட்டம் அதிகமாக இருக்குமென்பதால், கூட்டத்தை தவிர்ப்பதற்காக இப்போதே ஏராளமானோர் வாக்குச்செலுத்தி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply