நிலவில் அதிகளவில் நீர்! -நாசா விஞ்ஞானிகள் தகவல்

நிலவின் மேற்பரப்பில் இதற்கு முன்னர் கணிக்கப்பட்டதை காட்டிலும் அதிக அளவில் நீர்  உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேரிலாந்திலுள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்திலிருந்து, சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் குறித்த ஆய்வின் தலைவரான கேசி ஹொன்னிபால், நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்களிலும், நீண்டகாலமாக சூரிய வெளிச்சம் படாத பனித் திட்டுகளிலும் நீர் மூலக்கூறுகள் மறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 40,000 சதுர கிலோ மீற்றர் வரையில் நீர் மூலக்கூறுகள் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply