சீனாவில் அறிகுறி இல்லாமலே 137 பேருக்கு கொரோனா தொற்று!

ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றியது. அதன் பின்னர் இந்த வைரஸ் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் கடந்து தற்போது ஒட்டுமொத்த உலகத்திலும் பரவி கிடக்கிறது.

வலுவான சுகாதார கட்டமைப்பை கொண்ட நாடுகளும் கூட கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் சூழலில், கொரோனாவின் பிறப்பிடமான சீனா அதன் பாதிப்பில் இருந்து பெருமளவு மீண்டுவிட்டது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா மிகப்பெரிய வெற்றியை கண்டிருந்தாலும், அங்கு கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கிவிடவில்லை.

இந்த நிலையில் சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணம் காஷ்கர் நகரில் ஆடை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் 137 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Be the first to comment

Leave a Reply