வெளிச்சக்தியின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை! விரையும் அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதி – பின்னணி என்ன?

வெளிசக்தி ஒன்றின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே ஜனாதிபதியும் அரசாங்கமும் செயற்படுவதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளரே எம்.சி.சி திட்டத்திற்கு தலைமைதாங்குவதால், எம்.சி.சி உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடுவதற்கு இந்த விஜயம் வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்விவிவாரங்களில் அமெரிக்கா தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஜே.வி.பி மேற்கொண்டது. இதன் பின் தகவல் வெளியிட்ட நளிந்த ஜயதிச,

நாட்டின் நலன்களை புறக்கணித்து அரசாங்கம் உலகின் பலம்பொருந்திய நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றது.

ஆசியாவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னரே தனது நோக்கம் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை வலுப்படுத்துவது என மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டு மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கு பதிலாக அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply