வடமாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து துறைசார் செயலாளர் உடனான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் திருமதி P.S.M. சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 9.3௦ மணிக்கு இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வட மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து துறைசார் செயலாளர்கள், ஆளுநரின் செயலாளர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் துறை ரீதியான கடந்த கால செயற்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தேவையான விடயங்களை இனங்காணவும், தடையாக உள்ளவற்றை இனங்கண்டு தேவையான போது சட்ட ஆலோசனை பெற்று அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டும் என கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டமைப்பு அரசாங்கத்தை எதிர்த்தால் தாமும் அரசை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏச்.எம்.எம். ஹரீஸ் கூறியிருந்த நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்த விடயத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் அரசியல் தலைவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அம்பாறையில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

20ஆவது சீர் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதனை மூவின மக்களும் எதிர்த்துள்ளனர். இந்த சீர்திருத்தத்தை சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து இருப்பது மன வேதனைக்குரிய விடயம்.

20ஆவது திருத்தம் என்பது நிறைவேற்று அதிகார நடைமுறையை பெற்றுக் கொடுக்கிறது. இதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவிழந்து செல்கின்றது.

19ஆவது சீர்திருத்தத்தில் இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவான – நியாயமான பல செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவான ஒரு காரணியாக இருந்தது.

20ஆவது சீர்திருத்த நடைமுறையில் எமது தமிழ் தலைமைகள் நிதானமாக செயல்பட்டு இருக்கிறார்கள். 20ஆவது சீர்திருத்தத்தை எமது தலைவர்கள் யாரையும் துன்புறுத்திச் செயற்பட வைக்கவில்லை. இதனை இதற்கு முன்னரும் செய்ததில்லை, இனி வரும் காலத்திலும் செய்யப் போவதில்லை.

இச்சீர்திருத்தத்தில் உள்ள பாதக – சாதக தன்மைகளை எடுத்துரைக்கும் சக்தியாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் இருந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இனங்களிடையே துவேசத்தை விதைத்து பிரிவினைவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். அவர் திருந்த வேண்டும்.

எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 18ஆவது சீர்திருத்தத்தை எதிர்த்தது, 19 ஐ ஆதரித்தது , 20 ஐ எதிர்க்கின்றது இதனை நன்கு ஆராய்ந்த பிறகு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

முஸ்லிம் தலைவர்களை பொறுத்தளவில் 18,19,20, சீர்திருத்தங்களை ஆதரித்துள்ளனர். அது மாத்திரமல்ல கிழக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்ட திவிநெகும சட்டத்தைக் கூட ஆதரித்துவிட்டு பாரிய தவறு இழைத்து விட்டோம் என்று புலம்பித் திரிந்தவர்கள் தான் இந்த முஸ்லிம் தலைவர்கள்.

இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினர். எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் தமிழர்களையும் சேர்த்து சிறுபான்மை இனம் என்று பேசி வந்தனர்.

அவ்வாறு பேசிய தமிழ் தேசிய தலைவர்களுக்கு 20ஆவது திருத்தத்தை ஆதரித்து சிறந்த ஒரு பதிலடி கொடுத்துள்ளனர். இனியாவது தமிழ் தேசிய தலைவர்கள் திருந்த வேண்டும்.

இப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கல்முனை மாநகரில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகச் செயல்களை நாங்கள் மறந்துவிடவில்லை.

நல்லாட்சியில் அமைச்சுப் பதவிகளை எடுத்த கையோடு எமது பூர்வீக நிலங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதை மறந்துவிட்டு கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

தமிழ் முஸ்லிம் உறவு விடயத்தில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்தில் இணைந்து கொண்டு சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த காலங்களைப் போன்று எமது தமிழ் மக்களை நசுக்கி விடலாம் என்ற கனவினை அவர்கள் மறந்துவிட வேண்டும், எமது மக்கள் விழிப்புடன் தான் உள்ளனர் என்றார்.

Be the first to comment

Leave a Reply