தமிழக மீனவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதா ஸ்ரீலங்கா கடற்படை?

ஸ்ரீலங்கா கடற்படை நடத்திய கல்வீச்சு தாக்குதலில் இந்திய மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி-212 என்ற ரோந்துப் படகிலிருந்து கச்சதீவு அருகே தமிழக மீனவப் படகுகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பூண்டிராஜன் என்பவருக்கு சொந்தமானபடகில் மீன்பிடிக்கச் சென்ற சுரேஷ் என்பவர் காயமடைந்ததாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்தை ஸ்ரீலங்கா கடற்படை முற்றாக மறுத்துள்ளது.

இதனிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ருவிட்டர் பதிவில் ஒருவர் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply