அமெரிக்காவிலிருந்து புறப்பட்டது சிறப்பு விமானம்! விமானத்தில் ஏறும் முன்னர் வெளியிட்ட தகவல்

தற்போதைய சூழ்நிலையில், அமெரிக்காவின் சகாக்களுடன் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே ஆசியாவிற்கான தனது சுற்றுப்பயணம் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் விமானத்தில் ஏறும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளதுடன், சில தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார்.

அதில், இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகியநாடுகளுக்கான எனது விமானப்பயணம் ஆரம்பமாகிவிட்டது.

அமெரிக்காவின் சகாக்களுடன், சுதந்திரமான வலுவான செழிப்பான நாடுகளை கொண்ட, சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்கு கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி, என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்பயணத்தின் போது, இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply