காலி மீனவர்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட அனுமதி

காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு செல்ல இன்று (26) முதல் மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கடற்றொழிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காலி மீன்பிடி துறைமுக பணிப்பாளர் நிரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கடந்த 21 ஆம் திகதி முதல் காலி மீன்பிடி துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதேவேளை, மீன்பிடி துறைமுகங்களில் குவிக்கப்பட்டுள்ள மீன்களை சந்தைக்கு கொண்டுவருவதற்கான சில வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பதில் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் அது வௌியிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply