இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து நீண்ட தூர சேவைகளும் இடைநிறுத்தம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனை த்து நீண்ட தூர சேவைகளையும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது அத்துடன் உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் மாத்திரம் தடையின்றி செயற்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு புறகோட்டை மத்திய பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பிறபிக்கப் பட்டுள்ளதால் கொழும்புக்கு உள்ளேயும் வெளியேயும் சேவையை மேற்கொள்ளும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து நீண்ட தூர பஸ் சேவை களும் நிறுத்தப்பட்டுள்ளன.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார மற்றும் பாது காப்புத் துறைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் போக்கு வரத்துச் சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக விசேட போக்கு வரத்துச் சேவைகள் தடையின்றி செயற்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply