கொரோனா என்ற பெயரை வைத்ததால் படாதபாடு படும் இங்கிலாந்து வாசி

கொரோனா என்ற பெயரை கேட்டாலே கோபம் வரும் அளவுக்கு ஏராளமான சேதத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கொரோனா என்று பெயர் வைத்துக்கொண்டு ஒருவர் படாத பாடு பட்டு வருகிறார்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜிம்மி கொரோனா. இவருக்கு வயது 38. கொரோனா பாதிப்புக்கு முன் எல்லோரையும் போல இவர் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இப்போது இவரது பெயரை கேட்டாலே அனைவரும் ஏதோவொரு ரியாக்‌ஷன் கொடுக்காமல் நகருவதில்லை.

இதனால், ஜிம்மி கொரோனா போகும் இடத்திற்கெல்லாம் தனது அடையாள அட்டையை எடுத்துச் செல்கிறார். ஜிம்மிக்கு அண்மையில் குழந்தை பிறந்தபோதும் மருத்துவமனையில் அடையாள அட்டையை காட்ட வேண்டியிருந்தது. அவர் விளையாட்டுக்காக தனது பெயரை கொரோனா என கூறுவதாக பலரும் சந்தேகித்து பின்னர் அடையாள அட்டையை பார்த்த பிறகே திருப்தி அடைகின்றனர்.

இதுகுறித்து ஜிம்மி கொரோனா, “எனது பெயர் கொரோனா என்று யாருமே நம்புவதில்லை. பல ஆண்டுகளாக என்னுடன் பழகியவர்களை தவிர மற்றவர்கள் யாரும் எனது பெயர் கொரோனா என்று நம்புவதில்லை. எல்லா இடங்களிலும் என் பெயரை சொல்லி மக்கள் பேசும்போது விசித்திரமாக இருக்கிறது. கொரோனா என்பது எனது உண்மையான பெயர்தான் என நிரூபிக்க நான் படாத பாடு படுகிறேன்” என்று கூறுகிறார்.

Be the first to comment

Leave a Reply