யாழ்.போதனாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து, சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்ட ஒருவருக்கும் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து மாற்றப்பட்ட பெண் ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருவரிடமும் நேற்றைய தினம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை இன்று மாலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தை கொரோனா தொற்று பரவல் கொத்தணியுடன் தொடர்புடைய தென்னிலங்கையைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply