நாளை முதல் புதிய நடைமுறை: கடுமையாக பின்பற்றுங்கள் – இராணுவத் தளபதி விசேட கோரிக்கை

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தவர்களை நாளை முதல் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முதியவர்கள் வசிக்கும் வீடுகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்வதில் பல நெருக்கடிகளை எதிர்கொள்வதன் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை கடுமையாக பின்பற்றவேண்டும் என்பதுடன், பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீடுகளிற்குள்ளேயே இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply