சுற்றுலா மையத்தால் ஆபத்து – வவுனியாவில் கிளர்ந்தெழுந்த மக்கள்

வவுனியா குளத்தினுள் மண் போடப்பட்டு சுற்றுலா மையம் அமைக்கப்பட்டமைக்கு எதிராக மக்கள் செயலணி ஒன்று துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டடுள்ளது.

வவுனியா குளத்தின் ஒரு பகுதியில் அனுமதி பெறப்படாது நீர்ப்பாசன திணைக்களத்தின் ஒப்புதலுடன் கிரவல் மண் இடப்பட்டு பூங்கா மற்றும் படகுச் சவாரி என்பன உள்ளடங்கிய சுற்றுலா தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக இயற்கை விரும்பிகள் குளத்தினுள் மண் போடப்பட்டமை – விவசாயத்தினை பாதிக்கும் மற்றும் நிலத்தடி நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என தெரிவித்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியாக் குள கமக்காரர் அமைப்பு குறித்த சுற்றுலா தளத்திற்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக குறித்த செயலணி இன்று காலை வவுனியா நகர்ப்பகுதியில் வவுனியா குளத்தினுள் மண் இடப்பட்டமையினால் ஏற்படப்போகும் ஆபத்துக்கள் தொடர்பில் துண்டுப்பிரசுத்தினையும் விநியோகித்திருந்தனர்.

இதன்போது 30 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வயதானவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்படத்தக்கது.

Be the first to comment

Leave a Reply