கிளிநொச்சியில் பணியாற்றும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு யாழிலிருந்து பேருந்து சேவை!

கிளிநொச்சியில் பணியாற்றும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு யாழிலிருந்து பேருந்து சேவை!

நாட்டின் தற்போது எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்குத் தனியான பேருந்து சேவை இன்று திங்கட்கிழமை(26) பிற்பகல் ஆரம்பமானது.

கிளிநொச்சியில் இயங்கும் விவசாய பீடம், பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றில் பணியாற்றும் யாழ்.குடாநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் கொரோனாப் பெருந் தொற்றுக் காலத்தில் சன நெருசலைத் தவிர்க்கும் வகையில் பணிகளுக்குச் சென்று வருவதற்காக இந்தப் பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பிரதிப் பதிவாளர் கே. ஞானபாஸ்கரன் அறிவித்துள்ளார்.

தினமும் காலை-07 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து இந்தப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், மாலை-04.15 மணியளவில் கிளிநொச்சி வளாகத்திலிருந்து யாழ்.நோக்கிப் புறப்படவுள்ளது எனவும், இதற்கென 28 ஆசனங்களைக் கொண்ட பேருந்து ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Be the first to comment

Leave a Reply