அத்து மீறும் சிங்கள விவசாயிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தீவிர முயற்சியில் செங்கலடி பிரதேச செயலாளர்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை காணிகளில் அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்கள மக்களின் தரவுகளை திரட்டி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் முயற்சியில் செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்.

குறித்த பகுதிக்கு நேரடியாக சென்ற செங்கலடி பிரதேச செயலாளர் அங்கு விவசாய நடவடிக்கைகளுக்காக காடுகளை அழிக்கும் சிங்கள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பெயர் விபரங்களை சேகரித்துள்ளார்.

இதேவேளை அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட பல ஆதாரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் வழங்கியுள்ளதாகவும்,

குறித்த பகுதியில் காடுகளை அழித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்கள விவசாய அமைப்பின் தலைவர் லியனகே உட்பட பல விவசாயிகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply