கிளிநொச்சியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

கிளிநொச்சி தர்மபுரம் புகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து மாணவன் ஒருவர் சடலமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் திருமண விழாவிற்கு வருகை தந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தர்மபுரம் கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் தர்மபுரம் கட்டகாடு பகுதியில் இருந்து திருமண நிகழ்வுக்கு ஒன்றுக்கு வருகை தந்த இளைஞன் நேற்றைய தினம் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் குறித்த இளைஞனை தேடியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த இளைஞன் இன்றைய தினம் திருமண நிகழ்வு நடந்த வீட்டு வளவில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply