தற்காலிகமாக மூடப்பட்டது – திருகோணமலை மத்திய சந்தைக் கட்டடத்தொகுதி

திருகோணமலை நகரிலுள்ள மத்திய சந்தைக் கட்டடத்தொகுதி இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பொலிஸாரது பாதுகாப்புடன் மூடப்பட்ட குறித்த சந்தையில் கிருமித்தொற்று நீக்கும் நடவடிக்கைகள் திருகோணமலை நகரசபை தீயணைப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நகரின் முதன்மைத் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான பிசிஅர் பரிசோதனைகள் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply