சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவன்!

கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியிலுள்ள கிணறொன்றில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுளு்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தர்மபுரம் பகுதியை சேர்ந்த 18வயதான மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் தவறி விழுந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply