கிழக்கு மாகாணத்தில் பரவலாக கொரோனா தொற்று! பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை எங்கு அமுல்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் மிக விரைவில் அறிவிப்போம் என கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று சனிக்கிழமை (24) இரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது பேசிய அவர்,

கிழக்கு மாகாணத்தில் பேலிய கொட மீன் சந்தைக்கு சென்றவர்கள் மூலம் மட்டக்களப்பு, திருகோணமலை,பொத்துவில், கல்முனை போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அம்பாறை கல்முனை பிராந்தியத்தில் தற்போது 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply