களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா

களுபோவில வைத்தியசாலையின் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவு, 23ஆவது அறை, 7ஆவது அறை மற்றும் வெளிநோயாளர் பிரிவு ஆகியன நேற்றையதினம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இருப்பினும் அவசர விபத்து பிரிவு, 23ஆவது அறை, வெளி நோயாளர் பிரிவு ஆகியன கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply