ரஷ்யா, சீனா, இந்தியா, மீது டிரம்ப் குற்றச்சாட்டு

சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் எந்தவித கவலையுமின்றி காற்று மாசை ஏற்படுத்தி வருகின்றன என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டினாா்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, குடியரசு கட்சி சாா்பில் மீண்டும் போட்டியிடும் டிரம்ப், தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

டென்னெஸி மாகானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவரை எதிா்த்துப் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளா் ஜோ பிடன் உடனான இறுதி விவாதத்தில் பங்கேற்ற டிரம்ப் பேசியதாவது:

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு உரிய நியாயமான பங்கு அளிக்கப்படவில்லை என்பதால் தான், அதிலிருந்து அமெரிக்கா கடந்த 2017 இல் வெளியேறியது.

சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்க தீவிர நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வரும் நிலையில், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் எந்தவித கவலையும் இன்றி காற்று மாசுவை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பாரீஸ் ஒப்பந்தம் மூலம் சீனாவும், இந்தியாவும் தான் அதிக பலனை அடைந்திருக்கின்றன என்று அவா் கூறினாா்.

உலக வெப்பமயமாதலை, தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி அளவுக்குக் குறைப்பதை இலக்காகக் கொண்டு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

Be the first to comment

Leave a Reply