அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது. புளோரிடா மகாணத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் பயிற்சியின் போது  விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். கடற்படைக்கு சொந்தமான இருவர் மட்டுமே அமரக்கூடிய  T-6B Texan II – என்ற விமானம் போலே நகரில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில், சில வீடுகளும் கார்களும் தீயில் சிக்கியதாக கூறப்படுகிறது.

எனினும், இந்த விபத்தில் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகளுடன் கடற்படை தொடர்பில் இருப்பதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply