இராஜாங்க அமைச்சராகும் சஜித் அணி உறுப்பினர்? தென்னிலங்கை அரசியல் வட்டாரம் தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 20ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காகவே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், 20ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தாலும் அரசாங்கத்தினது வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என டயான கமகே குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எதிர்வரும் சில தினங்களில் டயானா கமகே இராஜாங்க அமைச்சு பதவி ஒன்றினை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply