தராகி சிவராம் படுகொலையுடன் லக்ஸ்மன் கதிர்காமர் தொடர்பு!

ஊட­க­வி­ய­லா­ளர் தராகி சிவ­ராம் படு­கொ­லைக்­கான உத்­த­ரவை, இலங்­கை­யின் முன்­னாள் வெளி­வி­வ­கார அமைச்­சர் லக்ஸ்­மன் கதிர்­கா­மரே பிறப்­பித்­தி­ருந்­தார் என்ற தக­வல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. முன்­னணி ஆங்­கில இணை­ய­மான தமிழ் நெட் இன் பிர­தம ஆசி­ரி­ய­ரும், தராகி சிவ­ரா­மின் நெருங்­கிய சகா­வு­மான ஜெயச்­சந்­தி­ரன் இந்­தத் தக­வலை அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளார்.


லக்ஸ்­மன் கதிர்­கா­மர் தனது சிபார்சை அப்­போ­தைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வின் கவ­னத்­துக்­குக் கொண்டு சென்ற நிலை­யில், வழ­மை­யான அரச புல­னாய்வு கட்­ட­மைப்­புக்­கள் ஊடாக தராகி சிவ­ராம் படு­கொலை அரங்­கேற்­றப்­பட்­டது என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

வன்­னி­யில் விடு­த­லைப்­ பு­லி­கள் தலை­மை­யு­ட­னான சந்­திப்­பொன்­றின்போது,  சான்­று­க­ளி­ன­தும் அரச புல­னாய்வுக் கட்­ட­மைப்­புக்­க­ளது உள்­ளக முக­வர்­க­ளது தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யி­லும் இதனை உறு­திப்­ப­டுத்தி அவர்­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர் எனவும் ஜெயச்­சந்­தி­ரன் கூறியுள்ளார்.

முன்­னைய ரணில் அர­சு­ட­னான,  விடு­த­லைப்­பு­லி­க­ளது சமா­தா­னப் பேச்­சுக்­க­ளின்போது முக­வ­ராக செயற்­பட்டு வந்­தி­ருந்த எரிக்­சொல்­ஹெய்மின் கடந்­த­ கால செயற்­ ­பாடு­கள்  தொடர்­பி­லான காணொலி உரை­யா­டல் ஒன்­றின்போதே ஜெயச்­சந்­தி­ரன் இதனை அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

அப்­போ­தைய சூழ­லில் இலங்கை அரச புல­னாய்­வுப் பிரி­வின் முக­வர்­க­ளா­கச் செயற்­பட்டு வந்­தி­ருந்த தமிழ் துணை ஆயு­தக்­கு­ழுக்­க­ளது,  உறுப்­பி­னர்­கள் ஊடாக முன்­னணி செயற்­பாட்­டா­ளர்­கள் வேட்­டை­யா­டப்­பட்டு வந்­தி­ருந்­த­னர்.

கடத்­தல்­கள் மற்­றும் கொலை­கள் அத்­த­கைய தரப்­புக்­க­ளின் ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன. அவ்­வாறே இலங்கை அரச உயர்­மட்ட பணிப்­பின் பிர­கா­ரம் தராகி சிவ­ராம் கொழும்பு பம்­ப­லப்­பிட்­டி­யில் கடத்­தப்­பட்­ட­து­டன்,  இலங்கை நாடா­ளு­மன்­றுக்கு அரு­கில் கொல்­லப்­பட்ட பின்­ன­ர் சட­ல­மாக வீசப்­பட்­டி­ருந்­தார்.

2000 ஆம் ஆண்டு முதல் 2010 வரை­யான காலப்­ ப­கு­தி­யில் 39 க்கும் அதி­க­மான தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மற்­றும் ஊட­கப்­ப­ணி­யா­ளர்­கள் இலங்­கை­யில் கொல்­லப்­பட்டு அல்­லது காணா­மலோ  ஆக்­கப்­பட்­டி­ருந்தபோதி­லும்,  கொலை­யா­ளி­கள் எவ­ரும் தண்­டிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்­லை­ என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Be the first to comment

Leave a Reply