மீன்கள் மூலம் பரவுமா கொரோனா? என்ன சொல்கிறார் வைத்திய நிபுணர்

மீன்கள் ஊடாக கொரோனா வைரஸ் பரவுமா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித ஆய்வுபூர்வமான தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால் மீன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லையென விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

நாம் தொடர்ச்சியாக கூறும் விதத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பில்லை.

மீன்களை பிடித்ததன் பின்னர் கைகளை சரியாக கழுவினால் அந்த சந்தர்ப்பங்களில் முகத்தை தொடுவதை தவிர்த்துக்கொண்டால் நோய் பரவுவதை தவிர்க்க முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply