அதிகாரத்தைப் பெற்ற கோட்டாபயவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா? நீதியமைச்சரின் பதிவால் வெடித்த சர்ச்சை

“ வேலை செய்து காட்டு, இல்லை அழிந்து விடு! சாக்கு போக்குகள் தற்போது பொருந்தாது” என்ற அர்த்தத்தில் நீதியமைச்சர் அலி சப்றி தனது முகநூல் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்த, நீதியமைச்சர் மொஹமட் அலி சப்றி, அந்த திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு சில மணி நேரத்திற்கு பின்னர் தனது முகநூல் பக்கத்தில் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்.

அதில், “வேலை செய்து காட்டு, இல்லை அழிந்து விடு! சாக்கு போக்குகள் தற்போது பொருந்தாது” என்ற அர்த்தத்தில் அந்தப் பதிவு அமைந்திருப்பதாக கூறப்படுகிறது

Be the first to comment

Leave a Reply