ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம்!

மத்திய மாகாணத்திலுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் இன்று (23) வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நபர்கள் கலந்துகொள்ளலாம் என்பதால் இன்று சிலருக்கு மாத்திரமே நியமனம் நேரில் வழங்கப்பட்டது.

மத்திய மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரை மதியுகராஜா, கணபதி கனகராஜ் மற்றம் இ.தொ.காவின் உப செயலாளர் பரத் அருள்சாமி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஏனைய ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமன கடிதங்கள் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என ஆளுநர் அவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தின் தனது ஆசிரியர் பயிற்சியினை நிறைவு செய்து சான்றிதல்களைப்பெற்று தனது கோவைகளை பூர்த்தி செய்த 419 ஆசிரிய உதவியாளர்களுக்கு இலங்கை ஆசிரிய சேவை தரம் மூன்று, தரம் ஒன்றுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்

Be the first to comment

Leave a Reply