வவுனியா வைத்தியர்களிடம் சிரேஸ்ட பிரஜைகளின் கோரிக்கை

வவுனியா நகரை அண்டிய பிரதேசங்களில் படுக்கையில் உள்ள வயோதிபர்களை சேவை அடிப்படையில் மருத்துவம் பார்ப்பதற்கு வைத்தியர்களின் உதவியை வவுனியா மாவட்ட சிரேஸ்ட பிரஜைகள் சங்கம் கோரியுள்ளது.

இது தொடர்பில் சிரேஸ்ட பிஜைகளின் சங்க தலைவர் கருத்து தெரிவிக்கையில்

வவுனியா நகரை அண்மித்த பகுதிகளில் படுக்கையில் உள்ள வயோதிபர்களை மாதத்தில் ஒரு தடவை சேவை நோக்கத்துடன் அவர்களின் வீடுகளில் சென்று மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கு வைத்தியர்களின் தன்னார்வ சேவையினை எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

இச் சேவைக்க தாதியர்களின் உதவியும் எதிர்பார்ப்பதாகவும் மாத்தில் ஒரு தடைவ வைத்தியர்களும் தாத்தியர்களும் இவ்வாறாக எம் முதுசங்களின் நலன்சார்ந்து சேவையில் ஈடுபடவும் அழைத்து நிற்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இத் தன்னார்வ சேவையில் மாதத்தில் ஒரு தடவை ஈடுபடவுள்ள வைத்தியர்களும் தாதியர்களும் 077861301 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply