வவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் தீ

வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சற்று முன்னர் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த தீ விபத்தானது பல்கலைக்கழக ஆண்கள் தங்குமிட விடுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். குறித்த தீ விபத்தில் எவருக்கும் பாதிப்புகளும் ஏற்படவில்லை என எமது விசேட செய்தி பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply