முஸ்லிம் காங்கிரஸின் நான்கு எம்.பிக்கள் 20 இற்கு ஆதரவு

பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்ட இருபதாவது திருத்தச்சட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன்படி கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம் எதிர்த்து வாக்களித்த அதேவேளை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அகமட், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் பேட்டியொன்றில் கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம், தான் 20 ற்கு எதிராக வாக்களிப்பேன் எனவும் ஆனால் தனது கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு தொடர்பில் தான் எதுவும் கூற முடியாது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply