பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தலைவர் நிஜமிக்கப்பட வேண்டும்..!

நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பெரும்பான்மையுடன் தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என யோசனை பெரும்பான்மையான வாக்குகளால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 87 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்;பினர் ஹர்சடி சில்வாவுக்கு பதிலாக ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் பெயரை பரிந்துரை செய்ய சபை முதல்வர் தினேஸ் குணவர்தன முயற்சித்தார்.இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது.

நிதி தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கு பெரும்பான்மையான விருப்பத்துடன் தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

எனினும், எதிர்கட்சிக்கு கிடைக்கப்பெறக்கூடிய ஒரே ஒரு தெரிவுக்குழுவான குறித்த தெரிவுக்குழுவுக்கு தங்களக்கு வழங்க வேண்டும் என தெரிவித்ததை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

நிலையியற் கட்டளை 121 – 1 விதிகளின் படி, அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் அந்த தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையே தெரிவு செய்வதற்காக பெரும்பான்மையை காட்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் தெரிவித்தார்.

இதனையடுத்து அது தொடர்பிலான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 70 மேலதிக வாக்குகள் நிறைவேற்றப்பட்டது.

Be the first to comment

Leave a Reply