நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை அடுத்து நாடாளுமன்றில் இன்று விசேட விவாதம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை அடுத்து, இதனைக் கட்டுப்படுத்துவது மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் நாடாளுமன்றில் இன்று விசேட விவாதமொன்று இடம்பெற்றது.

இதன்படி, இன்றைய ஒத்திவைப்புவேளை பிரேரணையினை நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்தார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்குறித்த நிலைமையானது எந்த அளவில் இருக்கின்றது என்பது குறித்து சுகாதார அமைச்சர் தெளிவான பதிலொன்றை விடுக்க வேண்டும். அதற்கு வெறுமனே பதில் அமையாது கட்டுபடுத்த முடியுமானது எனின் அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்த தரவுகளையும் முன;வைக்க வேண்டும். ஒன்று நாட்டை மீண்டும் முழுமையாக மூடவேண்டும் அல்லது தொற்றின் பாரதூர தன்மையை வெளிப்படுத்தி அதனுடன் நாட்டி கொண்டுசெல்ல நடவடிக்கை எடுப்பது. இந்த இரண்டு விடயத்திலும் பிரச்சினைகள் உள்ளன.  தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அறிவிப்புகளை பார்க்கும் போது  தொற்றின் பரவலை ஒப்புக்கொண்டு நாட்டை வழமைப்படி நடாத்திசெல்வது என்பது தெரிகின்றது. அப்டியாயின் இதற்கு முன்னர் இருந்ததை போன்று சாதாரண வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்த முடியாது. எனவே இது குறித்து தெளிவான நடைமுறைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

இதேபோன்று, இன்றை அமர்வில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொரோனா தொற்று நிலைமை குறித்து தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்படி, முறையான முகாவைத்துவம் காணப்பட்டமை காரணமாகவே நாட்டில் கொரோனா தொற்றை தொடர்ந்தும் கட்டுப்படுத்த முடிந்ததாக அமைசர் ரமேஸ் பத்திரன குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சுகாதார அமைச்சுடன் அணைந்து மிகவும் நேர்த்தியான முகாமைத்துவப்படுத்தழனார். இதனால்தான் தொற்றாளர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. முன்கூட்டிய தேடல் மற்றும் கண்கானிப்பு சிகிச்சை என்ற் திட்டத்திற்கு அமைவாக நாங்கள் நடவடிக்கை முன்னெடுத்தோம். நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் மிக விரைவாக அவர்களுடன் தொடர்புடைய இரண்டாம் மூன்றாம் நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனைகளை முன்னெடுத்து தொற்றை கட்டுப்படுத்தினோம். இதற்காக நாம் புலனாய்வு பிரிவினரை பயன்படுத்தினோம்.  இவ்வாறு முன்கூட்டிய தேடல் காரணமாகவே உரிய நேரத்தில் நோயாளர்களை அடையாளப்படுத்தவும் தனிமைப்படுத்தவும். சகிச்சைளயிக்கவும் எனக்கு முடிந்தது.

இந்த நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கு தற்போதாவது தீர்வொன்றை பெற்றுத்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை எரிப்பது குறித்து குழுவொன்று அமைத்து ஆராயுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதமொன்றின் ஊடாக நாம் கோரிக்கை விடுத்தோம். அதற்கு ஆறுமாத காலத்திற்குள் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுப்பதாக இணக்கம் தெரிவிக்க்ட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதிலே பபா பலிஹவட்ட போன்ற தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்திய அதிகாரி கூட குறிப்பிட்டிருந்தார் அவ்வாறு புதைக்கபடும் தொற்றாளர்கள் மூலம் மீண்டும் தொற்று ஏற்பட போவதில்லை என. ஆகவே அரசியல் தேவைக்காக மாத்திரமே அரசாங்கம் இதனை முன்னெடுக்காது உள்ளது.  இந்த நிலையில் 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சீல் இருந்த 6 மஸ்லிம் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஆகவே அவர்களுக்காக வேண்டியாவது முஸ்லிம் நபர்கள் தொற்றினால் உயிரிழந்தால் புதைக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகளை கொண்டே 20 வது நிறைவேற்றப்பட்டது ஆகவே தற்போதாவது ஒரு தீர்வை பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றேன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்தற்கு பொறுத்தமான வைத்தியசாலைகளையும், அதற்கு தேவையான வளங்களையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

காத்தான்குடி மற்றும் கரடியனாறு ஆகிய வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளாக பெறப்பட்டுள்ளன. இதற்கு நாங்கள் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை. நாட்டில் ஏனைய மாவட்டங்களை போன்று எமது மாவட்டமும் அதற்கான ஒத்துழைப்புகளை வழங்கும்.  ஆனால் இந்த வைத்தியசாலைகளில் முறையான ஆய்வுக்கூடங்கள் இல்லை. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது பொதுவாக ஆய்வுக்கூடங்கள் மிகவும் அவசியமானதாகும். ஆகவே தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து போசுவதை காட்டிலும் தொற்று அதிகரித்தால் சிகிச்சைளயிக்க தயாராக இருக்க வேண்டும்.  மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற போது வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க பிரச்சினைகள் காணப்பட்டன. அதேபோன்று மேலுமொரு தாக்குதல் இடம்பெற்றால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க இடம் இல்லாது போயிருக்கும். ஆகவே மட்டக்களப்பில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன.

Be the first to comment

Leave a Reply