கொரோனா தொடர்பில் அரச தகவல்களை தமிழில் வௌியிட வேண்டும்: ஜே.வி.பி கோரிக்கை

அரசாங்கம் சுகாதார அமைச்சு வெளியிடும் கொரோனா தொற்று தொடர்பிலான சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் தமிழ் மொழியில் வெளியாவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் அரசினால் வௌியிடப்படுகின்ற தகவல் சிங்கள் மொழியில் வெளியாகின்றமையினால் தமிழ் மக்கள் அதனைப் புரிந்து கொள்வதற்கு சிரமங்களை எதிர் கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply