வாகனங்களுக்கு தட்டுப்பாடு! வவுனியாவில் இழுத்து மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பல வியாபார நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

கொவிட்-19 தாக்கத்தையடுத்து உலக பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதுடன், நாடுகளுக்கிடையிலான வர்த்தகமும் பாதிப்படைந்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விற்பனை நிலையங்கள், கம்பனிகளில் வாகனங்கள் இல்லாமையால் பல விற்பனையகங்களும், கம்பனிகளும் இழுத்து மூடப்பட்டுள்ளதுடன்.

இதில் பல இளைஞர், யுவதிகள் தொழில் வாய்பை இழந்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply