ஐ.தே.க தலைமைக்கு போட்டியிட நவீன் விருப்பம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடப்போவதாக நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ள நிலையிலேயே, தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை கட்சியின் செயற்குழுவால் மட்டுமே தீர்மானிக்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் கருத்தையும் கேட்டு புதிய தலைவரை நியமிக்க முற்பட வேண்டும்.” – என்றார்.

Be the first to comment

Leave a Reply