24 மணி நேரத்தில் 209 பேர்- பொலிஸார் வெளியிட்ட தகவல்!

மேல்மாகாணத்தின் பல பாகங்களிலும் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 209 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அந்த வகையில், தம்வசம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 பேர் கைது செய்யப்பட்டதோடு, 90 பேர் ஹெரோயின் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஐஸ் ரக போதைப்பொருள் உடமையில் வைத்திருந்தமைக்காக 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வேறு பல குற்றங்களின் அடிப்படையிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply